40 வயதிலும் 20 வயதுபோல் இளமையாக இருக்கணுமா? அப்போ இந்த உணவுகள் சாப்பிடாதீங்க
இளமையிலே வரக்கூடிய முதுமையான தோற்றத்திற்கு நாம் அன்றாட வாழ்வில் உண்ணக்கூடிய உணவு தான் காரணமாகின்றன. அது எந்தெந்த உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவுகள்
சிறிய வயதில் முதுமையான தோற்றம் வருகின்றமைக்கு நாம் உண்ணும் பல உணவுகள் காரணமாகின்றன.
இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது, தோல் சுருக்கம் ஏற்படுவது, முதுமை தோற்றம் அடைவது என இந்த காலத்து இளைஞர்கள், பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
இது போன்ற பிரச்சினைகளுக்கு தவறான உணவு பழக்கமும், சரியான தூக்கமின்மை போன்ற முக்கிய காரணமாக இருக்கிறது. நாம் கோடை காலங்களில் கணக்கில்லாமல் குளிர்பானங்களை வாங்கி குடிப்போம்.
இந்த குளிர்பானங்கள் கூடுதலான நாட்களுக்கு இருப்பதற்காக கார்பனேற்றம் செய்யப்படுகிறது. இதனால் இது உடலுக்கு பாதகத்தை மட்டுமே தரும்.
இது ஆரோக்கியமானது இல்லை. இது உடலில் உள்ள நீர்ச்த்தை உறிஞ்சிக்கொள்ளும். அதிக கொழுப்புசத்து கொண்ட துரித உணவுகளை சாப்பிட கூடாது.
ரத்த ஓட்ட சீராக இருந்தால் தோல் எப்போதும் பளபளப்பாக இருக்கும். துரித உணவுகளை சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் தடைபடும்.
இதனால் தோல் சுருக்கம் என்பது விரைவில் வரக்கூடும். உடலில் உப்பு சத்து அதிகமானால் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக, தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.
இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் காட்சி தர கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது ஆல்கஹால். இதை உட்கொள்வதால் நோய்கள் வருவதுடன் நீர்ச்சத்தும் முற்றாக இழக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |