“ஸ்டார்ட் மியூசிக்” வரலாற்றை மாற்றிய பிக்பாஸ் நிவாஸினி! கலாய்த்த பிரியங்கா
பிக்பாஸ் நிவாஸினி ஸ்டார்ட் மியூசிக் வரலாற்றையே மாற்றி எழுதி விட்டதாக பிரியங்கா கலாய்த்துள்ளார்.
ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்டார் மியூசிக் சீசன் 4.
இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது. மற்றைய சீசன்களை போல் இந்த சீசனையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்காவின் நிகழ்ச்சி என்றாலே அதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வாரம் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 பிக்பாஸ் சீசன் 6 ன் முக்கிய பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
பிக்பாஸ் போட்டியாளர் கலக்கிய தருணங்கள்
இவர்களில் ஜனனி, தனலெட்சுமி, சிவின், மகாலட்சுமி, குயின்சி, நிவாஸினி ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
அப்போது அங்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அசைவிற்கு பதிலாக வாயில் பாட்டை பாடி காட்டி மாட்டியுள்ளார் நிவாஸினி.
இதில் கடுப்பான பிரியங்கா, “ ஸ்டார்ட் மியூசிக் வரலாற்றையே மாற்றிவிட்டார் நிவாஸினி..” என கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ பிக்பாஸிலும் இப்படி தான் சொதப்பினார்... இதிலுமா?” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.