வெங்கட் பிரபுவின் தம்பியை மேடையில் வைத்து செய்த பிரியங்கா! அரங்கமே கலாய்த்து தள்ளிய காட்சி..
வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வைத்து தொகுப்பாளர் பிரியங்கா வைத்து செய்துள்ளார்.
ஸ்டார்ட் மியுசிக் சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்டார் மியூசிக் சீசன் 4.
இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது.
மற்றைய சீசன்களை போல் இந்த சீசனையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்காவின் நிகழ்ச்சி என்றாலே அதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறார்கள்.
பிரேம்ஜியை கலாய்த்த பிரியங்கா
இந்த நிலையில் இந்த வாரம் ஸ்டார்ட் மியுசிக்கில் பிரேம்ஜி மற்றும் நடிகர் சிவா கலந்துக் கொண்டுள்ளார்கள்.
அதில்,“ தொடர்ந்து பாடிக் கொண்டு செல்லும் போது ஒரு வரியை மட்டும் கண்டுபிடிக்க வேண்டும்.” இதில் பிரேம் ஜி தோற்ற காரணத்தினால் அவர் மீது தண்ணீர் அடிக்கபட்டுள்ளது.
இந்த காட்சியை பார்த்து அங்கிருந்த பிரியங்கா உட்பட ரசிகர்கள், போட்டியாளர்கள் என அனைவரும் கலாய்த்து தள்ளியுள்ளார்கள்.
மேலும் “ சினிமாவில் இருப்பவர்களுக்கும் சினிமா பாடல் தெரியவில்லையா?” என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.