அம்மா பிரிவின் சோகம்! நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணமா? வெளியான தகவல்
தமிழ் சினிமாவில், பிரபல இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பல அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்தவர் கங்கை அமரன்.
இவரின் மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம் ஜி உள்ளனர். இவர்களை பற்றி சொல்லி தான் தெரியவேண்டியதில்லை..
இதையடுத்து, 42 வயதாகும் பிரேம் ஜி இதுவரை திருமணம் செய்யாமல் உள்ளார். இதனிடையே, இவரின் திருமணத்தை பற்றி தந்தை கங்கை அமரன் கூறியதாவது,
பிரேம்ஜிக்கு இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் தற்போது தான் அவருடைய அம்மா இறந்து உள்ளதால் அந்த சோகம் முடிந்த பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இதுவரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்த பிரேம்ஜி தற்போது ஒப்புக் கொண்டு இருப்பதாகவும், அவருக்கேற்ற பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், சரியான பெண் அமைந்ததும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறினார்.