ஸ்டாலினை வாழ்த்திய கருணாநிதி... குடும்பத்தினர் கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்
திமுக தலைவராக ஸ்டாலின் இன்று பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு குடும்பத்தினர் அழகான ஓவியம் ஒன்றினைப் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகவும் மற்றும் அமைச்சர்கள் இன்று பதவியேற்ற நிலையில், முக ஸ்டாலினுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பதவியேற்ற முதல் நாளில் தான் கொடுத்த வாக்குறுதியில் ஐந்தில் கையெழுத்திட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் ஸ்டாலினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் ஓவியம் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த ஓவியத்தில் கலைஞர் கருணாநிதி, பெரியார், அறிஞர் அண்ணா இவர்கள் ஸ்டாலினை வாழ்த்துவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
