பிபிஇ கிட் உடையணிந்து கொரோனா வார்டில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி... தீயாய் பரவும் புகைப்படம்
கோவைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அங்கு அதிரடியாக முழுகவச உடையை அணிந்துகொண்டு வலம் வந்த புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
கொரோனா 2வது அலை தமிழகம் முழுவதும் அதிவேகமாக பரவி வந்த நிலையில், நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது.
கொரோனா பரவலை தடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவையில் மு.க.ஸ்டாலின் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். இப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 30, 2021
மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.
தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! pic.twitter.com/lXNI6oebWI