நடுரோட்டில் சிறுவர்களுடன் மஜாவாக பம்பரம் விடும் பிரபல நடிகை!
நடுரோட்டில் சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விட்டு விளையாடிய நடிகை ஸ்ருதிகா அர்ஜீனின் வீடியோக்காட்சி வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “ஸ்ரீ” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ருதிகா.
இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக இருந்தார்.
இவரின் திரைப்படங்கள் எல்லாம் நினைத்த வெற்றியை தராவிட்டாலும் பார்க்கக்கூடியளவு இருந்தது.
இதனை தொடர்ந்து ஸ்ருதிகா, அர்ஜீன் என்பவரை முகப்புத்தகத்தில் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் திருமணத்திற்கு பின்னர் “குக் வித் கோமாளி சீசன் 3” முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றார்.
நடுரோட்டில் பம்பரம் விடும் பிரபல நடிகை
இந்த நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு நடுவராக கலக்கி வருகிறார்.
ஸ்ருதிகா அவருடைய சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், நடுரோட்டில் சிறுவர்களுடன் இணைந்து பம்பரம் விடும் காட்சி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், வர வர ஸ்ருதிகாவின் அட்டகாசத்திற்கு அளவு இல்லாமல் இருக்கிறது” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.