புத்தகங்களுடன் புதைக்கப்பட்ட ஸ்ரீமதியின் உடல்! மகளின் உயிரை பறித்தது 7 பேர்... அதிர வைத்த தந்தை
ஸ்ரீமதியின் மரணத்திற்கு 7 பேர் காரணம் என்று ஸ்ரீமதி தந்தை அளித்திருக்கும் தெரிவித்திருக்கும் தகவல் இணையத்தினை அதிர விட்டு வருகின்றது.
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.

ஜூலை 13ம் தேதி அதிகாலை விடுதியில் இரண்டாவது மாடியில் இருந்து ஸ்ரீமதி மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார்.
அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது.
ஆனால், மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மரணத்தில் மர்மம்
இதனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து 10 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் இன்று பெற்றனர்.
இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் இடுகாட்டில் சில புத்தகங்களுடன் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
பரபரப்பை ஏற்படுத்திய தந்தை
இந்நிலையில் ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு மனவேதனையுடன் இருந்த ஸ்ரீமதியின் தந்தை பேட்டி கொடுத்து இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது,
என்னுடைய மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவருடைய இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். என் மகளின் இழப்பிற்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகம் மட்டுமே காரணம்.
எனக்கு வெளியில் எந்த ஒரு எதிரிகளோ, துரோகிகளோ கிடையாது. என் மகளின் சாவிற்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகம் தான்.
குறிப்பாக, அந்த ஏழு பேர் தான் என் மகளின் இறப்புக்கு காரணம். இது முழுக்க முழுக்க திட்டமிட்டு செய்த கொலை, தற்கொலை கிடையாது.
வார்டன், ரெண்டு மூணு பள்ளி ஆசிரியர், பள்ளி ஓனர், ஓனர் மகன்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் என் மகளை கொன்று விட்டார்கள்.
என் மகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று மனவேதனையுடன் ஸ்ரீமதியின் தந்தை கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.