இலங்கையின் பாரம்பரிய சுவையை நினைவூட்டும் கோதுமை புட்டு... வெறும் 10 நிமிடம் போதும்!
பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்த விடயம். அந்தவகையில், சில உணவுகள் வெறும் பசியை மட்டுமல்ல, இனிய நினைவுகளையும் நிறைவாக்குகின்றன.
அப்படிப்பட்ட பாரம்பரிய உணவுகளில் ஒன்றுதான் இலங்கையின் கோதுமை புட்டு.ஆவியில் வேகவைத்த மென்மையான கோதுமை மாவுடன் சேர்க்கப்படும் துருவிய தேங்காய் என்பன இணையும் போது அது கொடுக்கும் மனதை மயக்கும் மணம், இவை அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத சுவை அனுபவத்தையே ஏற்படுத்திவிடும் என்றால் மிகையாது.

காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும், குடும்பம் ஒன்று கூடும் சிறப்பு நாட்களிலும் அன்புடன் பரிமாறப்படும் இந்த பாரம்பரிய உணவு, தலைமுறைகள் கடந்து இன்றுவரை இலங்கையலர்களின் சமையல் மரபின் பெருமையை எடுத்துரைக்கிறது.
தேங்காய் பால், மாம்பழம், வாழைப்பழம் அல்லது விருப்பமான கறி வகைகளுடன் சேர்த்து சாப்பிடும்போது இதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
பாரம்பரியத்தின் மணத்தையும் சுவையையும் நினைவூட்டும் அசல் கோதுமை புட்டை வெறும் பத்தே நிமிடங்களில் எளிமையாகவும் சுவையாகவும் எவ்வாறு செய்யலாம் என இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |