Brinjal Maldive Fish Sambal : இலங்கை பாணியில் அசத்தல் சுவை கத்தரிக்காய் மாசிக்கருவாட்டு சம்பல்!
Brinjal Maldive Fish Sambal : இலங்கை வீட்டுச் சமையலின் சுவையே தனிதான். குறிப்பாக, சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது நாவில் சுவையை அள்ளிக் கொடுக்கும் நம்ம ஊர் பாரம்பரிய உணவுகளுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
அந்த வரிசையில், கத்தரிக்காயின் மென்மையான சுவையுடன் மாசிக்கருவாட்டின் மணமும் சுவையும், காரமான மிளகாயின் ருசியும் ஒன்றாக சேரும் இந்த கத்தரிக்காய் மாசிக்கருவாட்டு சம்பலின் சுவைக்கு அடிமையாகாதவர்கள் அரிது.

சூடாக வடித்த சாதம், பருப்பு கறி, ஒரு சின்ன குழம்பு… இவற்றுடன் இந்த சம்பலை கொஞ்சம் வைத்து சாப்பிட்டாலே போதும், சாதாரண மதிய உணவும் ஒரு முழுமையான இலங்கை வீட்டு விருந்தாக மாறிவிடும்.
குறிப்பாக மாசிக்கருவாட்டின் தனித்துவமான மணமும், வதக்கிய கத்தரிக்காயின் சுவையும் சேர்ந்து கொடுக்கும் அந்த ருசியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அதுவும் அதிக சிரமமில்லாமல், வீட்டில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டே இந்த சுவையான சம்பலை எளிய படிமுறையில் எவ்வாறு செய்யலாம் என இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |