கம்மியான மேக்கப்பில் பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட புகைப்படம்! வைரலாகும் குத்தாட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு லியோ படத்தில் விஜய்யுடன் நடித்து பிரபலமான ஜனனியின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ஜனனி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஜனனி. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த இவர், பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் தனக்கான வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில், ரசிகர்களின் ஆதரவும் அதிகமாகவே இருக்கின்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன் இவருக்கு கிடைத்த வாய்ப்பு இன்னும் இவரை பிரபலமாக்கியது.

இந்நிலையில் தற்போதும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மிகவும் சிம்பிளான ஆடையில், குறைவான மேக்கப்பில் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.
மேலும் குத்தாட்டம் போட்ட காணொளியினையும் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |