திடீரென வாய்ப்புகளை இழந்த ஸ்ரீதிவ்யா.. தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
வெள்ளத்திரையில் ஒரு சிம்பிளான நடிகையாக வலம் வந்த ஸ்ரீதிவ்யா நீண்ட நாட்களுக்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வெள்ளித்திரையில் முதல் படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா.
இவர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தில் சினிமாவிற்குள் நுழைந்தவர்.
இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.
வெள்ளித்திரையில் கவர்ச்சியை காட்டாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் வளர்ந்து வந்த நடிகை ரெமோ படத்தை தொடர்ந்து பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டார்.
ஸ்ரீதிவ்யா இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க..
இந்த நிலையில் சுமாராக 5 வருடங்கள் சினிமாவில் விட்டு சென்று விட்டார். இதற்கான காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை.
தொடர்ந்து சமீபத்தில் அவர் சொந்த ஊரில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. ஸ்ரீதிவ்யா படங்களில் நடிக்காமல் போனது இளம் ரசிகர்களுக்கு பாரிய இழப்பை கொடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா சமீபத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“ சினிமாவில் இல்லாவிட்டாலும் இவரின் அழகு குறையவில்லை..” என கமண்ட் செய்துள்ளார்கள்.