சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சீரியலில் நடித்த ஸ்ரீதிவ்யா.. ஆச்சரியமடைந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ஸ்ரீ திவ்யா.
முதல் படமே இவரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய வைத்தது. அதன்பின்னர், ஸ்ரீ திவ்யாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், அவர் ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.
இதனிடையே, நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் பிரபலமான Thoorpu Velle Rallu என்கிற சீரியலில் முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். இதனைக்கண்ட ரசிகர் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.