மகளின் மடியில் தேவதையாக நடிகை ஸ்ரீதேவி: ரசிகர்களை கட்டிப்போட்ட புகைப்படம்
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் அட்டகாசமான தனது மகளின் மடியில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் சத்தியராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக அறிமுகமானார்.
பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
இவர் வெளியிட்டு வரும் புகைப்படத்தினையும் வனிதாவையும் லிங்க் செய்து இவரைப் புகழ்ந்தும், வனிதாவை வசைபாடியும் ரசிகர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் தனது மகளின் மடியில் மிக அழகாக படுத்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதில் இருவரும் தேவதை போன்று வெள்ளை நிற உடையில் அட்டகாசமான சிரிப்பில் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        