கொஞ்சம் கூட மாறல! பிரபாஸை புகழ்ந்து தள்ளிய ஸ்ரீதேவி விஜயகுமார்...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஸ்ரீதேவி விஜயகுமார்
காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஜீவாவுடன் தித்திக்குதே, தனுஷுடன் தேவதையை கண்டேன் மற்றும் மாதவனுக்கு தோழி கதாபாத்திரத்தில் இவர் நடித்த பிரியமான தோழி போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இப்போதும் இருக்கத்தான் செய்கின்றது.2009ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் 2009ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார்.தற்போது 37 வயதாகும் இவருக்கு வயதாகின்றதா என்பதே ஒரு கேள்வி குறி தான்.
இந்நிலையில் மீண்டும் பிரபாஸ் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் ஜோடி வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில் சுந்தரகாண்டா என்ற படத்தில் நடிக்கின்றனர்.இந்த நிலையில், பிரபாசுடன் இணைந்து நடித்த ஸ்ரீதேவி அவரை பாராட்டி பேசியுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், "என்னுடைய முதல் படமான ஈஸ்வர் படத்தில் நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அதே குணாதிசயங்களுடன் தான் இன்றும் இருக்கிறார்.
தற்போது இவ்வளவு பெயர் மற்றும் புகழுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் அவருடைய குணத்தில் எந்த விதமான மாற்றமும் தெரியவில்லை எனவும், அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |