ஆனந்த் அம்பானி என்னை திருமணத்திற்கு வர வேண்டாம் என்று சொன்னார்... உண்மையை உடைத்த கங்கனா ரணாவத்!
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை புறக்கணித்ததற்கான காரணத்தை பிரபல நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
அம்பானி வீட்டு திருமணம்
ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் சல்மான் கான், ரஜினிகாந்த், ஷாருக் கான், மற்றும் உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மணமகனிடமிருந்து தனிப்பட்ட அழைப்பைப் பெற்றிருந்தாலும், அதிகம் பேசப்பட்ட ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை ஏன் தவறவிட்டேன் என்பது குறித்து கங்கனா ரனாவத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சித்தார்த் கண்ணனுடன் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்ட போது இது குறித்து மனம் திறந்துள்ளார். அம்பானி வீட்டு திருமணம் நடைப்பெற்ற அதே நாளில் தனது தம்பியின் திருமணம் இடம்பெற்றதால் அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், நான் அதுப்பற்றி ஆனந்த் அம்பானியிடம் கூறினேன். அவர் உடனே என் நிலமையை புரிந்து கொண்டு என்னை வரவேண்டாம் என்று கூறினார் எனவும்,ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஜோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக உயர் திரையுலக திருமணங்களில் கலந்துகொள்வதைத் தவிர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |