மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாளுக்காக புதிய டூடுளை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்!
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 60ஆவது பிறந்த நாளுக்காக கூகுள் புதிய டூடுளை மாற்றியுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
இவர் தமிழில் ரஜினி, கமல் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலத்தின் உச்சத்தின் இருந்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி திரைப்பட பக்கமும் மிகவும் பிரபலமானாவர்.
நடிகை ஸ்ரீதேவி பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
ஸ்ரீதேவி பிப்ரவரி 24, 2018 அன்று துபாயில் உள்ள ஜுமேரா எமிரேட்ஸ் டவரில் வைத்து மரணமடைந்திருந்தார். மேலும், அங்கு அவரது ஹோட்டல் அறை குளியல் தொட்டியில் தான் இறந்து கிடந்தார்.
முன்னதாக அவரது மரணம் மாரடைப்பு வழக்கு என்று அழைக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாமல் மர்மமாகவே இருக்கிறது. இவர் திடீரென மரணமடைந்தது சினிமா ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
பிறந்த நாளுக்கு வாழ்த்திய கூகுள்
ஆகஸ்ட் 13, 2023 இன்று ஸ்ரீதேவியின் 60வது பிறந்தநாள் ஆகும்.
அவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், கூகுள் டூடுல் அவரை இன்னும் நினைவுகூருகிறது. இந்த கூகுள் டூடுளை மும்பையைச் சேர்ந்த பூமீகா முகர்ஜி என்பவர் வடிவமைத்திருக்கிறார்.
நடிகை ஸ்ரீதேவி மிஸ்டர் இந்தியா முதல் இங்கிலீஷ் விங்கிலீஷ் வரையிலான குறிப்பிடத்தக்க படைப்புகளுடன் அவரை மிகவும் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவராகக் கொண்டாடுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |