நடிகை ஸ்ரீதேவியின் மகளா இது? பாவாடை தாவணியில் அம்மாவை மிஞ்சிய புகைப்படம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் பாவடை தாவணியில் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஸ்ரீதேவியின் மகள்
மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் நிலையில், தென்னிந்திய சினிமாவிலும் நடிப்பதற்கு தயாராகி வருகின்றார்.
பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் அப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஜான்வி கபூர். தென்னிந்திய திரையுலகில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்திற்காக அவர் ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
நடிகை ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் விரைவில் ஹீரோயினாக களமிறங்க உள்ளார். அவர் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாவணியில் ஜான்வி, குஷி கபூர்
நடிகை ஜான்வி கபூரும், குஷி கபூரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஜான்வி, குஷி இருவரும் பாவடை தாவணி அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதில் குஷி கபூர் தனது தாய் ஸ்ரீதேவியைப் போன்று அச்சுஅசலாக இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் நடிகை ஜான்வி கபூரின் காதலன் ஷிகார் பஹாரியாவும் உடன் சென்றிருந்தார்.
சமீபத்தில் ஷிகார் பஹாரியாவின் பிறந்தநாள் என்பதால் அதற்காக ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்ய அவரை திருப்பதிக்கு அழைத்து சென்றுள்ளார்.