Srilanka Chicken Curry: எங்கும் கிடைக்காத சுவையில் இலங்கையில் செய்யப்படும் கோழி கறி
பொதுவாக உலகில் எங்கும் கோழியை வைத்து பல ரெசிபிகளை செய்வார்கள். ஆனால் ஒரு சில நாடுகளில் சுவை வித்தியாசமாக செய்யப்படும்.
அதை அந்த இடத்திற்கு சென்று ருசிப்பதை விட இருக்கும் இடத்தில் இருந்து ரெசிபி தெரிந்துகொண்டு செய்யலாம். இந்த பதிவில் இலங்கையில் செய்யப்படும் பாரம்பரிய கோறிகறியின் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோழி 1 கிலோ
- மிளகு பொடி 1 ஸ்பூன்
- உப்பு 2 ஸ்பூன்
- மஞ்சள் 1 ஸ்பூன்
- Roasted Curry Powder 2 ஸ்பூன்
- புளி எலுமிச்சை அளவு (கரைத்தது)
- வெங்காயம் 1
- பூண்டு 10 பல்
- இஞ்சி 1 துண்டு
- கறிவேப்பிலை
- ரம்பை
- பட்டை
- ஏலக்காய் 4
- curry Powder 3 ஸ்பூன்
- மிளகாய் Powder 3 ஸ்பூன்
- தண்ணீர் 2 கப்
செய்யும் முறை
முதலில் கோழியை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கோழியில் மிளகு , உப்பு, மஞ்சள், Roasted Curry Powder, புளி தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வேறாக எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் உரலில் பூண்டு, இஞ்சி மற்றும் பட்டை போட்டு இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை சிறிதாக வெட்டி வைக்க வேண்டும்.
இதன் பின்னர் அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் எண்ணை ஊற்றி சூடாக்கி வெங்காயம், கறிவேப்பிலை, ரம்பை, ஏலக்காய் போட்டு வதக்கிய சிறிது நேரத்தில் இடித்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
இது வதங்கிய பருவம் தெரிந்தவுடன் அதில் curry Powder, மிளகாய் Powder சேர்க்க வேண்டும். பின்னர் இதில் கலந்து வைத்துள்ள கோழியை சேர்த்து கலந்துவிட்டு மூட வேண்டும்.
இதை ஒரு 5 நிமிடத்தில் திறந்து நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் உப்பு தேவை என்றால் சேர்த்து கொள்ளலாம்.
இப்போது இதை 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான இலங்கை பாரம்பரியத்தில் செய்யப்படும் கோழி கறி தயார். இதை அப்படியே சாதத்தில் வைத்து சாப்பிட்டால் சாப்பாடு அதிகம் சாப்பிடுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |