வீட்டில் 1 கப் அரிசி மா இருக்கா? அப்போ இலங்கை ஸ்பெஷல் லெவரியா செய்ங்க
இலங்கையில் பரவலாக அறியப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு உணவு "லெவரியா" தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இடியாப்பத்தில் காரமலை செய்யப்பட்ட தேங்காய் துருவலை சுற்றி வேகவைத்து தயாரிக்கப்படும் இந்த லெவரியா, இலங்கையின் பாரம்பரிய காலையுணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அண்மையில் வெளியான "டூரிஸ்ட்" திரைப்படத்தில் இந்த உணவு ஒரு முக்கிய காட்சியில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, இது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வலுவதால் இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
- புட்டு அல்லது இடியாப்பம் அல்லது கொழுக்கட்டை மாவு – ஒரு கப்
- உப்பு – தேவையான அளவு
- பூரணம் செய்ய தேவையான பொருட்கள்
- தேங்காய்த் துருவல் – ஒரு கப்
- வெல்லம் – அரை கப் (பொடித்த)
- நெய் – 4 ஸ்பூன்
- முந்திரி – 10 (உடைத்தது)
- திராட்சை – 20
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். மற்றொரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவுடன் சிறிது உப்பை சேர்த்து, கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து, கொழுக்கட்டை மாவு பதத்தில் மென்மையாக பிசையவும். கடைசியாக ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து பிசைந்து, மூடி வைக்கவும்.
விருப்பமானவர்கள், சிறிது குங்குமப்பூவை சூடான தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை மாவுடன் கலந்து கொள்ளலாம்.ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானவுடன் முந்திரி, திராட்சியை வறுக்கவும்.
பின்னர் தேங்காய் துருவல் மற்றும் துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கவும். வெல்லம் உருகி, தேங்காயுடன் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு வந்ததும் இறக்கி வைக்கவும்.
வாழைஇலைகளை சதுரமாக வெட்டிக்கொள்ளவும். இடியாப்பக் குழாயில் பிசைந்த மாவை எடுத்து, வாழைஇலையின் மீது மெதுவாக பிழியவும். அதற்குள் தயார் செய்து வைத்த பூரணத்தை மையத்தில் வைத்து, இலையை பாதியாக மடிக்கவும்.
இப்படித் தயார் செய்த லெவரியாவை இட்லி தட்டில் அல்லது ஸ்டீமரில் வைத்து 10–15 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். இந்த லெவரியாவை காலை உணவாகவும், அல்லது மாலை நேரத்தில் தேநீர் மற்றும் வாழைப்பழத்துடன் பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |