இறைச்சி சுவையை மிஞ்சும் இலங்கையின் Soya Meat கறி...இந்த பொருளை சேர்த்து செய்து பாருங்க
இலங்கையின் பாரம்பரியத்தில் பல கறிவகைகளை செய்வார்கள். இதில் ஒரு சில ரெசிபிகள் உலகத்தில் இலங்கையை விட எங்கும் சிறப்பாக செய்ய முடியாது என்றே சொல்லலாம்.
இலங்கையர்கள் Soya Meat கறியை விரும்பி சாப்பிடுவார்கள். இது சைவம் அசைவ சுவையில் சந்தைகளில் கிடைக்கும். இதை சமைத்து எடுத்தால் அப்படியே இறைச்சி சுவையும் பார்ப்பதற்கும் இறைச்சி போல இருக்கும். எனவே இந்த பதிவில் இலங்கை பாணியில் Soya Meat கறி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செய்யும் முறை
முதலில் சோயா மீட்டை உப்பு சேர்த்து சூடு நீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதை பிளிந்து எடுத்து அதில் மஞ்சள் உப்பு எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து ஏலக்காய், கடுகு, பட்டை, கராம்பு போட்டு வதக்க வேண்டும்.
இதில் வெங்காயம் சேர்க்க வேண்டும். பின்னர் வெந்தயம் இடித்த பூண்டு போட்டு எல்லாவற்றையும் நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இதில் மிளகாய் பொடி Roasted Curry Powder போட்டு வதக்க வேண்டும்.
இது ஒரு பருவத்திற்கு வதங்கிய பின்னர் கலந்து வைத்துள்ள சோயாமீட்டை இதில் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.
இதனுடன் கறிவேப்பிலை, தக்காளி, ரம்பை, பச்ச மிளகாய் போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவற்றை நன்றாக கலந்து வதக்கிய பின்னர் தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் மூடி சமைக்க வேண்டும்.
பின்னர் திறந்து அதில் மிளகு பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இதை லேசாக உப்பு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான சோயா மீட் கறி தயார். வீட்டில் எதுவும் இல்லாத சமயத்தில் சோயாமீட்டை வைத்து சுவையான கறி செய்து ருசியுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |