யாழ்ப்பாண ஸ்டைலில் காரசாரமான ரசம்! மணமணக்கு வாசனையுடன் எப்படி செய்றாங்க தெரியுமா?
தமிழர்களின் பண்பாட்டின் படி ரசம் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஒரு உணவு.
இந்த ரசத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள், சளி பிரச்சினை, காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு என பல நோய்களுக்கு மருந்தாக செயற்படுகிறது.
இதனால் தான் “ஏழைகளின் மருந்து” என ரசத்தை அழைக்கிறார்கள். இத்தனை மருத்துவ குணங்கள் உள்ள ரசம் அதில் சேர்க்கப்படும் மூலிகைகளின் பெயர்களை பொருத்து பெயர் வைக்கப்படும்.
உதாரணமாக கொத்தமல்லி சேர்த்தால் கொத்தமல்லி ரசம், வெந்தயம் தண்ணீரில் ரசம் வைத்தால் வெந்தய ரசம் என அழைக்கப்படும்.
அந்த வகையில் இலங்கையர்கள் தயாரிக்கும் காரமான ரசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
- பூண்டு - 4-6 பல் (நறுக்கியது)
- மிளகு - 1 டேபுள் ஸ்பூன்
- வரமிளகாய் - 1-2
- சோம்பு - 1/4 டேபுள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டேபுள் ஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1/4 டேபுள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- புளி
- தண்ணீர் - தேவைக்கேற்ப
தயாரிப்பு முறை
முதலில் ரசத்திற்கு தேவையானளவு புளிக்கரைச்சலை தயார் செய்ய வேண்டும்.
பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சோம்பு, சீரகம், மல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை நன்றாக சுத்தமாக கழுவி விட்டு அதனை அம்மி அல்லது மிக்ஸியை பயன்படுத்த நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடானதும் புளிக்கரைச்சலை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு கிளறவும்.
கிளறிக் கொண்டே தேவையானளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சுமார் 2 -3 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.
கொதித்து நுரை போல் வரும் அப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை சேர்த்து பெருங்காயம் தூள் சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சூடான காரசாரமான ரசம் தயார்!