TCDC: டாப் குக்கூ வாகீசன் செய்த கொத்து ரொட்டி - இலங்கை ரெசிபி இதோ
இலங்கை மக்களின் மிகவும் பிரபலமான கொத்து ரொட்டி ரெசிபியை டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் செய்திருந்தார்.
டாப் குக்கு டூப் குக்கூ
கிரகல டிவி நிகழ்ச்சியில் டாப் குக்கு டூப் குக்கு எனும் நிகழ்ச்சி சமைக்க ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக மக்கள் மனதில் இடம்பிடித்து வருகின்றது.
ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு உணவு எப்படியும் பிரபலமாக இருக்கும். அந்த வகையில் இலங்கையில் பல உணவுகள் பிரபலமாக இருந்தாலும் கொத்து ரொட்டி மிகவும் பிரபலமான உணவாகும்.
இது ரொட்டி மட்டும் மசாலா பொருட்கள் கொண்டு செய்யப்படுகின்றது. இந்த பதிவில் வாகீசன் செய்த கொத்து ரொட்டி ரெசிபி பற்றி பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- இறைச்சி கறி (ஆடு அல்லது மாடு) - அரை கப்
- முட்டை - 1 வீச்சு
- ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி - 2
- லீக்ஸ் (பச்சை இலை) - கைப்பிடியளவு
- மஞ்சள் கோவா - கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக
- சிறிய தக்காளி - 1
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 5
- கறிவேப்பிலை - ஒரு இணுங்கு

செய்யும் முறை
ஒரு தட்டையான அல்லது கொத்துவதற்கு ஏற்ற பாத்திரம் ஒன்றை (Non Stick Pan) அடுப்பில் வைத்து அது சூடாகியபின் ஒரு மேசைக் கரண்டி எண்ணை விடவும்.
எண்ணை சூடாகியபின் தக்காளி சிறு துண்டுகளாக வெட்டியதை எடுத்து போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
பின் கோவாவைப் போட்டு 2 -3 நிமிடங்கள் வதக்கவும். அதன் பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் பச்சை மிளகாயை மற்றும் லீக்சை கொட்டி 1 நிமிடம் வதக்கவும்.

இதன் பின்னர் தேவையான அளவு உப்பு தூள் தூவவும். பின் முட்டையை உடைத்து தாளித்த கலவைமேல் ஊற்றி பிரட்டவும். உடனடியாக ரொட்டித் துண்டங்களையும் இறைச்சிக் கறியையும் மாறி மாறி போட்டு பிரட்டி அதன்பின் தீயை மிதமாக்கி 3-4 நிமிடங்களுக்கு பிரட்டி இறக்கவும். இறக்கும் முன் முட்டை அவிந்து விட்டதா என பார்க்கவும்.

இல்லாவிட்டால் பச்சை முட்டை வாசனை வரும். வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை உங்களின் விருப்பத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
இது அடிப்பிடிக்காமல் கரண்டியால் வதக்கிக்கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக இதில் போடும் காய்கறிகளை மிகவும் சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |