சளி, இருமல் தொல்லையா? அப்போ தினமும் ஒரு பூண்டு சாப்பிடுங்க- வேறு யாரெல்லாம் சாப்பிடலாம்?
சமைக்கும் உணவுகளின் சுவையை அதிகரிக்க நாம் ஏகப்பட்ட பொருட்களை பயன்படுத்துவோம். அதே சமயம், அவை உடலுக்கு ஏதாவது ஒரு வகையில் ஆரோக்கியமும் தர வேண்டும்.
அப்படியாயின், சமையலின் வாசணைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தும் மூலிகை பொருட்களில் பூண்டும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சக்தி வாய்ந்த மருந்தாக பயன்படுத்தப்படும் பூண்டு நீரிழிவு நோய் முதல் அதிக கொழுப்பு வரை பல உடல்நலப் பிரச்சினைகள் வரை தீர்வளிக்கிறது.
தினமும் ஒரு பூண்டு சாப்பிட்டால் ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என பலரும் கூறுகிறார்கள். இந்த கருத்து எந்தளவு உண்மை என பதிவில் பார்க்கலாம்.
அந்த வகையில், தினமும் ஒரு பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் கீழுள்ள பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
பூண்டு உள்ள ஆரோக்கிய பலன்கள்
1. அதிக கெட்ட கொழுப்பு பிரச்சினை அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கு இதெல்லாம் முக்கிய காரணமாக அமைகிறது. தினமும் காலையில் ஒரு பூண்டு சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு கணிசமாக குறையும்.
2. ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு பூண்டு சிறந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. கருவுறாமை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பூண்டு நிரந்தர தீர்வு கொடுக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி பாலியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
3. வலி மற்றும் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூண்டு இயற்கையான வலி நிவாரணியாக உள்ளது. பூண்டில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் வலியை குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் கொடுக்கிறது. மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் பூண்டில் மகிமை எமது முன்னோர்களுக்கு மாத்திரமே தெரியும்.
4. பூண்டில் உள்ள ஊட்டசத்துக்கள் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்க தீர்வளிக்கிறது. இரத்த நாளங்களை அகலப்படுத்துவதால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
5. சளி, இருமல் போன்ற பொதுவான தொற்றுநோய்களில் இருந்து நிவாரணம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் ஒரு பூண்டு சாப்பிடலாம். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உடலை தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும். அதே போன்று உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
