வீட்டில் கத்தரிக்காய் இருக்கா? 15 நிமிடத்தில் செய்யலாம் கத்தரிக்காய் பொறித்த சம்பல்
தமிழர்களின் உணவின் பாரம்பரியத்தை அடித்துக்கொள்ள எந்த ரெசிபிகளாலும் முடியாது. காய்கறிகளில் உணவு சமைத்தால் கூட அதிக எளிமையாகவும் சுவையாகவும் சமைப்பார்கள் தமிழர்கள்.
அந்த வகையில் இந்த பதிவில் பார்க்க இருப்பது இலங்கையின் சிறப்பு ரெசிபிகளில் ஒன்றான கத்தரிக்காய் பொறித்த சம்பல் தான். இதை செய்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் இருந்தால் போதும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்
- கத்தரிக்காய் 500
- வெங்காயம் 1
- கடுகு அரை டீஸ்பூன்
- சீரகம் அரை டீஸ்பூன்
- பூண்டு 5 பல்
தாளிக்க
- எண்ணெய்
- கடுகு
- சீரகம்
- கறிவேப்பிலை
- வினிகர்
- புளி தண்ணீர் 60 மி லீ
- வரமிளகாய் அரைத்தது
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரை லீட்டர் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை பொறித்து எடுக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை பொறித்து எடுக்க வேண்டும்.
இது இரண்டையும் தனியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு உரலில் கடுகு, பெரிய சீரகம், பூண்டை உரித்து உரலில் இடித்து தனியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
இது கொஞ்சம் வதங்கி வெடித்து வரும் நிலையில் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பின்னர் இதில் இடித்து வைத்துள்ள கடுகு சிரக பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதில் வினிகர் மற்றும் புளித்தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும்.
பின்னர் இதில் பொறித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் கத்தரிக்காயை சேர்க்க வேண்டும். பின்னர் இதை ஒரு ஐந்து நிமிடங்கள் மூடி வேக வைத்து இறக்கினால் சுவையான கத்தரிக்காய் பொறியல் சம்பல் தயார். இதை சாதத்தில் வைத்து சாப்பிட்டால் சுவை பிரமாதம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |