இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய மாடலிங் குயின்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்
இலங்கையில் மாடலிங் துறையில் வளர்ச்சியடைந்து வரும் பியூமி ஹன்சமாலி தற்போது இலங்கை காசுக்கு ரூபாய் 10 இலட்சம் கொடுத்து ஆடுகளை வாங்கிய சம்பவம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை அழகியின் உருக்கமான பதிவு
மாடலிங் துறையில் தற்போது பிரபல்யமடைந்து வரும் இலங்கை அழகி பியூமி ஹன்சமாலி சமூக சேவையில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
இவர் சமிபத்தில் தன்னுடை மகனின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு ஆடுகள் வாங்கிவதற்காக ஆட்டு பண்ணைக்கு சென்றுள்ளார்.
அப்போது நிறைய ஆடுகள் வெட்டுவதற்காக வளர்க்கப்படுகிறது என்ற தகவல் அவருடைய காதிற்கு செல்கிறது.
அதனை பார்க்கும் போது பாவமாக இருந்துள்ளதால் அங்கிருந்த அணைத்து ஆடுகளையும் இலங்கை காசிற்கு ரூபாய் 10 இலட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்த தகவல் கேட்டு இலங்கை ஊடகங்கள் அவரை பேட்டியெடுத்த போது சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை அதில் முன்வைத்திருந்தார்.
பேட்டியில் உண்மையை உடைத்த பிரபலம்
இந்நிலையில் அவர் பேட்டியில் கூறிய விடயங்கள்,“ வாழ்க்கை என்பது வாழ மட்டுமே கோடிக்கணக்கான பணத்தை வங்கியில் வைத்துக் கொண்டு என்ன செய்வது?, மேலும் ஆடு வாங்கிய கதையை மிக அழகாக கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து இது போன்று பல சமூக பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்தால் இவருக்கான ரசிகர்கள் இணையத்தில் அதிகரித்துள்ளனர்.
மேலும் இலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் இவரை தொடர்புக் கொள்பவர்களுக்கு இவர் தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் தங்களின் கருத்துக்களை வைரலாக்கி வருகிறார்கள்.