கோழிக்கறிக்கே Tuff கொடுக்கும் பலாக்காய் மோஜு: இந்த 3 பொருட்களே போதும்
பல நாடுகளில் பல வகையான உணவுகள் செய்யப்படும். அவற்றில் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கும் உணவுகளும் அதிகம் அடங்கும். நமது இயற்கையில் இருக்கும் காய்கறி பழங்களை சமைத்து ஆரோக்கியத்திற்கு உட்கொள்வது தற்போதைய தலைமுறையினரிடம் மிகவும் குறைவாகவே உள்ளது.
இதனால் தற்போது இருப்பவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை ஆனால் எதிர்கால சந்ததியினர் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதற்காக இயற்கையின் காய்கறிகளை அவர்களின் உணவில் சுவையாக சேர்ப்பது நமது கடமை.
எனவே தான் இந்த பதிவில் இலங்கையில் கோழிக்கறி சுவைக்கு சமமாக செய்யப்படும் பலாக்காய் மோஜு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிஞ்சு பலாக்காய் 01
- சின்ன வெங்காயம் 20
- பச்ச மிளகாய் 20
- மஞ்சள் அரை டீஸ்பூன்
- உப்பு அரை டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் அரை லீட்டர்
- கடுகு 3 டீஸ்பூன்
- வினிகர் 3 டீஸ்பூன்
தாளிக்க
- பூண்டு 2 பல்
- ரம்பை
- பட்டை
- கராம்பு
- கறிவேப்பிலை
- வர மிளகாய் அரைத்தது
- மஞ்சள் அரை டீஸ்பூன்
- உப்பு அரை டீஸ்பூன்
- சக்கரை 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் சிறிய பிஞ்சு பலாக்காயை சிறிய துண்டுகளாக அதன் பால் நீக்கி சுத்தமாக வெட்டி கழுவி எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அதில் மஞ்சள் உப்பு சேர்த்து கலந்து தனியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பொறிக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
இது சூடாகியதும் அதில் கலந்து வைத்துள்ள பலாக்காயை தனியே பொறித்து எடுக்க வேண்டும். பின்னர் அதில் பச்ச மிளகாயை நடுவில் இரண்டாக கீறி அதையும் பொறித்து தனியே வைக்க வேண்டும்.
பின்னர் சின்ன வெங்காயத்தை பொறித்து அதையும் நல்ல பதம் வந்ததும் தனியே எடுத்து வைக்க வேண்டும். இதன் பின்னர் கடுகை நன்றாக பேஸ் போல அரைத்து 3 டீஸ்பூன் போட்டு அதில் வினிகர் அதே அளவில் சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
பின்னர் இன்னுமொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, பட்டை, ரம்பை, கறிவேப்பிலை, கராம்பு போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதில் கொஞ்சம் வரமிளகாய் அரைத்ததை சேர்க்க வேண்டும்.
பின்னர் கலந்து வைத்துள்ள கடுகு கலவையை சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். பின்னர் உப்பு சக்கரை சேர்த்து நன்றாக கலந்த பின்னர் பொறித்து வைத்துள்ள பச்ச மிளகாய் பலாக்காய் சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். இப்போது 10 நிமிடங்கள் வதக்கி கொஞ்சம் வேகவைத்து இறக்க வேண்டும்.
இந்த படிமுறையில் செய்து எடுத்தால் சுவை அசைவத்தை மிஞ்சும். இதை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்தும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |