சென்னை அணியில் இலங்கை இராணுவ வீரர்... சர்சைக்கு மத்தியில் குவியும் ஆதரவு!
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவரும் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளருமான மஹீஷ் தீக்ஷன என்பவரை ஐ பி எல் தொடரில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுத்தமைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மஹீஷ் தீக்ஷனவை 70 இலட்சம் ரூபாவுக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு எதிரியல்ல.
இலங்கை தமிழர்களை வஞ்சித்த, தமிழக மீனவர்களை தினந்தோறும் துன்புறுத்தும் இலங்கையும் இந்தியாவுக்கு எதிரிதான்.
Really pls don't bring politics into sports,Every year sl Team come to india or India Team travel to sl, many Tn players played in Sl soil what where you doing that time ?.
— Praveen (@jaya_praveen23) February 14, 2022
பாகிஸ்தான் வீரர்களை நாடு விரும்பவில்லை என்பது போல் இலங்கை வீரர்களை தமிழர்கள் விரும்பவில்லை என கருத்துகள் பரவி வந்தது.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இது விளையாட்டு, அரசியல் கிடையாது. விளையாட்டு மக்களை ரசிகக்க வைக்கவும், பொழுது போக்கிற்காக நடத்தப்படுவதே.
இதிலும் அரசியல் பேச வேண்டாம். நல்ல வீரர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கோரி வருகின்றனர். இனம்,மொழி, மதங்களை கடந்து மக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படும்.