ருசியான இலங்கை ரொட்டி...இந்த ஒரு உணவு பொருளை சேர்த்தால் இவ்வளவு நன்மையா?
இலங்கையில் பிரபலமான உணவுகளில் ரொட்டியும் ஒன்று.
இன்று நாம் இலங்கையர்கள் விரும்பி உண்ணும் ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவைக்கு சற்று மிளகு சேர்ந்து ரொட்டி தயாரிக்கும் போது எளிதில் ஜீரணமாகும்.
சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனியால் ஏழரை வருடம் சிக்கி சின்னாபின்னமாகும் ராசிகள்.... யாருக்கு ஆபத்து!
இலங்கை ரொட்டி எப்படி தயாரிக்கலாம்?
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
வெளிநாட்டில் நடிகை ராதிகா வாங்கிய விருது! இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?
உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்துகொள்ளவும்.
பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.
சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
சூப்பரான மிளகு ரொட்டி ரெடி.
கைக்குழந்தையுடன் பிக்பாஸ் கவின் வெளிவிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்
மிளகு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்த மருத்துவ மொழி.
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
கருப்பு மிளகு உணவை செரிக்க வைப்பதிலும் பெரிதும் உதவும்.
அதன் வெளிப்புறத்தில் உள்ள ஆற்றல் மிக்க பைட்டோ-நியூட்ரியன்ட் ஊக்கி கொழுப்பு அணுக்களை உடைத்தெறியும்.
இது வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்க உதவும்.
இதனால் அதிகப்படியான நீர் வெளியேறுவதால், உடலில் இருந்து நச்சுப் பொருட்களும் வெளியேறும்.
இவையனைத்தும் கூட்டாக சேர்ந்து, உடல் எடை குறைய துணை புரியும். ஆகுவே உடல் எடை குறைய தினமும் உண்ணும் உணவில் கொஞ்சம் மிளகு பொடியை தூவி கொள்ளுங்கள்.
அதிகப்படியாக அதை சேர்க்கக்கூடாது. அது வேறு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.