Solo பயணிகளுக்கு சொர்க்கம் இதுதான்- கொழும்பில் மறக்க முடியாத இடங்கள் இதோ!
ஆசியாவில் இலங்கை ஒரு இயற்கை எழில் கொஞ்சும் நாடாக பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வருவாயை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் சுற்றுலாத் துறையை ஒரு முக்கியமான துறையாகக் கருதி அதனை முன்னெடுப்பதற்காக பல திட்டங்களை செய்து வருகிறது.
பருவகால மாற்றங்கள் ஏற்படும் பொழுது வெளிநாடுகளில் உள்ள பயணிகள் இலங்கையில் உள்ள அழகான கடற்கரைகள், கலாச்சார இடங்கள், இயற்கை அழகு மற்றும் சாகச நடவடிக்கைகளை பார்ப்பதற்காக இலங்கைக்கு படையெடுப்பார்கள்.
வரலாற்றுச் சின்னங்களால் வெளிநாட்டவர்களை அதிகம் கவர்ந்து வைத்திருக்கும் இலங்கையின் பொருளாதாரம் சற்று குறைவாக உள்ளதால் பயணிகள் எளிமையான பட்ஜெட்டில் இலங்கை முழுவதையும் சுற்றிப் பார்க்கலாம்.
குடும்பமாக வருபவர்களை விட தனியாக வருபவர்களை அதிகமான இடங்களுக்கு பயணிக்கிறார்கள். நீங்களும் இலங்கையை தனியாளாக சென்று சுற்றிப் பார்க்க விரும்பும் நபராக இருந்தால், மறக்காமல் கீழே உள்ள இடங்களுக்கு செல்லுங்கள். இது உங்களுக்கு சுவாரஷ்யமான அனுபவங்களை கொடுக்கும்.

சிவப்பு பள்ளிவாசல்
இலங்கை- கொழும்பு பகுதிக்கு தனியாக வரும் அனைத்து பயணிகளும் பார்க்கும் இடம் தான் ஜாமி-உல்-அல்ஃபார் பள்ளிவாசல். இது வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சிவப்பு நிறத்தில் இருக்கும். கொழும்பு மக்களின் பாரம்பரியங்களின் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. அந்த இடத்தில் நிறைய கடைகளையும் பார்க்கலாம்.
தேசிய அருங்காட்சியகம்
இலங்கை என்றால் எப்படி இயற்கையான விடயங்கள் பிரபலமோ, அதே போன்று கலை கலாச்சாரத்திற்கும் இந்த நாடு பிரபலம் தான். அதிலும் பண்டையக்கால சான்றுகளையும் வருங்கால தலைமுறைக்காக பாதுகாத்து வருகிறது. அப்படியொரு இடம் தான் இலங்கையில் உள்ள தேசிய அருங்காட்சியகம்.
காலி முகத்திடல்
இலங்கை பற்றிய செய்திகளை அடிக்கடி பார்க்கும் பயணிகளுக்கு காலி முகத்திடல் பார்க்காமல் இருக்க முடியாது. காலி முகத்திடலில் நீங்கள் இலங்கையின் அழகை காணலாம். இங்கு பகலை விட இரவு நேரங்களில் அதிகமான இலங்கையர்கள் மற்றும் பயணிகள் இருப்பார்கள்.
சுதந்திர சதுக்கம்
வரலாற்றின் ஒரு பகுதியாக பார்க்கப்படும் சுதந்திர சதுக்கம் போகாமல் உங்களுடைய பயணத்தை முடித்து விடாதீர்கள். சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளைப் போற்றும் இடமாக இது பார்க்கப்படுகிறது. இலங்கை வந்தால் மறக்காமல் பாருங்கள்.
துறைமுக நகரம் (Port City)
காலி முகத்திடல் பார்க்க வரும் சமயத்தில் Port City-உம் பார்க்கலாம். இங்கு இலங்கையில் பிரபலமான உணவுகளை வாங்கி சுவைக்கலாம். அத்துடன் இலங்கையில் செயற்கையாக அமைக்கப்பட்ட இந்த இடம் இலங்கை மக்களுக்கும் சுவார்ஷ்யத்தை கொடுக்கிறது. அதிகமான பயணிகள் இதனை வந்து பார்வையிடுவார்கள். இரவு நேர பார்ட்டிகளை இங்கு காணலாம். தனியாக இலங்கை வரும் பயணிகள் அதிகம் இங்கு வருவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |