இலங்கை ஸ்டைல் டேஸ்டியான தேங்காய் சாதம் ரெசிபி- தினமும் செய்யலாம்
தற்போது இருக்கும் இளைஞர்கள் சொந்த வீடு மற்றும் குடும்பத்தை விட்டு படிப்பு, வேலைக்காக வெளியூர்களில் தங்கியிருக்கிறார்கள்.
இதில், நிறைய பேர் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தனியாக வீடு எடுத்து, அவர்களுக்கு தேவையான சாப்பாட்டை சமைத்து சாப்பிடுகிறார்கள். அப்படியொரு சந்தர்ப்பத்தில் உங்கள் வீட்டில் யாராவது இருந்தால் இலகுவாகவும், சுவையாகவும் செய்யக்கூடிய உணவுகளின் ரெசிபி சொல்லிக் கொடுக்கலாம்.
அந்த வகையில், இன்றைய கால இளைஞர்கள் சுவையான தேங்காய் சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக இலங்கையர்கள் ஒரு சில பொருட்கள் வித்தியாசமாக சேர்ப்பார்கள்.
அந்த வாசணையில் சாப்பிடும் பொழுது, நிறைய சாப்பாட்டை சாப்பிட முடியும். அத்துடன் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அப்படியாயின் இலங்கை ஸ்டைல் தேங்காய் சாதம் எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வடித்த சாதம் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் சாதம் எப்படி செய்வது?
முதலில் சாதத்தை வடித்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனை ஒரு காலித்தட்டிற்கு மாற்றி விட்டு, அதே வாணலியில் துருவிய தேங்காயை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும். அதையும் அதே போட்டு வைக்கவும்.
வறுத்து தனியாக வைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும். மிக்ஸி அல்லாதவர்கள் அம்மியில் கூட வைத்து அரைத்து கொள்ளலாம். அடுத்தப்படியாக, வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை ஒன்று பின் ஒன்றாக போட்டு பொன்னிறமாகும் வரை எண்ணெய்யில் பொரிய விடவும்.
கடைசியாக கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதங்க விடவும். வதங்கிய வெங்காயத்துடன் பொடித்து வைத்திருக்கும் பொடியை தூவி அதனுடன் சாதத்தை சேர்த்து கிளறினால் சுவையான தேங்காய் சாதம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |