அரிசி, பருப்புகளில் வண்டு, பூச்சிகள் வருகின்றதா? இதை மட்டும் செய்தாலே போதும்
வீடுகளில் பயன்படுத்தும் அரிசி மற்றும் பருப்புகளில் வண்டு, பூச்சி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள், அரிசி, பருப்பு போன்ற தானியங்களில் வண்டு, பூச்சி இவை அதிகமாகவே வரும்.
இவ்வாறு வந்துவிட்டால் உடனே அதனை குப்பையில் கொட்டிவிடுவோம். மீண்டும் அதை வைத்து சமைப்பதில்லை.
ஆனால் இனி அவ்வாறான பிரச்சனை என்றால் இவற்றினை குப்பையில் கொட்ட வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு பொருளை அரிசி பருப்பில் போட்டு வைத்தாலே போதுமாம்.
அரிசி, பருப்பில் வரும் பூச்சிகள்
கஸ்தூரி மேத்தி கிரேவி மற்றும் உணவுகளில் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல் துணியில் கட்டி அரிசி, பருப்பு போன்றவற்றில் வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
இவற்றில் இயற்கையான பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உள்ளதால், பூஞ்சை, பாக்டீரியா வருவதை தவிர்க்க முடியும்.
கஸ்தூரி மேத்தியின் கடுமையான மணம் பூச்சிகளை விரட்டுவதுடன், பூச்சிகளிலிருந்து சிறந்த பாதுகாப்பாகவும் இருக்கின்றது.
அரிசி, பருப்பு போன்றவற்றை நீண்ட நாட்களாக பிரஷ்ஷாக வைத்திருக்க உதவுகின்றது.
பூச்சிகள் வராமல் தடுப்பதால், உணவுப்பொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.
ஆதலால் கஸ்தூரி மேத்தியை துணியில் கட்டி, அரிசி மற்றும் பருப்பு டப்பாக்கில் போட்டு வைத்தால் இவற்றின் நறுமணம் பூச்சிகளை விரட்டுவதுடன், நீண்ட நாட்கள் உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமலும் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |