வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நெடுந்தீவு புறாக்கூடு... ஏன் அமைக்கப்பட்டது?
யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவில் ஒல்லாந்தரது ஆட்சியைச் சிறப்பாக அடையாளப்படுத்தும் ஐரோப்பியர்கால மரபுரிமைச்சின்னங்களில் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது பறவைகள் சரணாலயம் எனப்படும் புறாக்கூடு.
இவ்வமைப்பானது ஒல்லாந்தராட்சி நடைபெற்ற இலங்கையில் அவர்களால் கட்டமைக்கப்பட்ட கட்டட அமைப்புக்களில் நெடுந்தீவைத் தவிர வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால் தான் ஒல்லாந்தர்களின் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த மையங்களில் நெடுந்தீவானது முக்கியத்துவம் பெறுகின்றது.
புறாக்கூடு ஐரோப்பியர்காலத்தில் இராணுவ, நிர்வாக இரகசியங்களைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் இத்தீவு மையமாகக் காணப்பட்டதென்ற வரலாறு அங்குள்ள மக்கள் மத்தியில் இன்னும் நிலவுகின்றது. இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |