பொங்கல் தினத்தில் யாழ் குயின் கொடுத்த அப்டேட்- வாழ்த்துக்களை குவிக்கும் இலங்கையர்கள்
இலங்கை புகழ் ஜனனி நடிக்கும் முதல் படத்தின் அப்பேட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கை ஜனனி
பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர்.
ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.
முதல் பட அப்டேட்
அந்த வகையில், விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன், தற்போது விஜய் சேதுபதி, மிஸ்கின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஜனனி அடுத்து லோகேஷ் - ஸ்ருதி ஹாசன் கூட்டணியில் உருவாகும் உசுரே படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் கமிட்டாகிய பின்னர் படக்குழுவினரை சந்தித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் உசுரே படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை ஜனனியும் அவரின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இவரின் வளர்ச்சியை பார்த்த இலங்கை ரசிகர்கள் குறித்த பிரபலத்திற்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |