குட்டை உடையில் வலம் வரும் இளம் நடிகை ஸ்ரீலீலா! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீலீலா ட்ரெண்டிங்கான குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவுக்கு தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 'குறிச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது.
தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள புறநானூறு திரைபடத்தில் நாயகியாக நடித்து வருகின்றார் ஸ்ரீலீலா.
அதன் மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.
இறுதியாக நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் 1500 கோடியை கடந்து வசூல் வெறியாட்டம் ஆடியது.
நடிப்பை தாண்டி பல சமூக சேவைகளிலும் ஈடுப்பட்டு வரும் ஸ்ரீலீலா மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இவ்வளவு சிறிய வயதில் இவருக்கு இருக்கும் பக்குவதை்தை பார்த்து இவரின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் விரிவடைந்துக்கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் ஸ்ரீலீலா செம ட்ரெண்டிங்கான குட்டை உடையில் தற்போது வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |