ஒரே மாதத்தில் ஒல்லியாகணுமா? அப்போ கோதுமையை இப்படி செய்து சாப்பிடுங்க.. தீர்வு நிச்சயம்
பொதுவாக தானியங்கள் சாப்பிட்டு அளவிற்கு அதிகமான ஊட்டசத்துக்கள் அதிகம் நமக்கு கிடைக்கும்.
இதன்படி, கோதுமை தோசை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாகக் குறைந்து விடும் என்பார்கள்.
நாம் இரவு நேரங்களில் எடுத்து கொள்ளும் சப்பாத்தி, தோசைகளில் அதிகமாக கோதுமைகள் கலக்கப்படுகின்றது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.
அரிசியை சாப்பிடுவதற்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் கோதுமையை அதிகம் சாப்பிடலாம்.
அந்த வகையில் முளைக்கட்டிய கோதுமைவில் தோசை செய்து சாப்பிட்டால் எவ்வளவு ஒல்லியாக இருப்பவர்களும் மெலிந்து விடுவார்களாம். அப்படியாயின் அது எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கோதுமை - தேவையானளவு
காட்டன் - துணி
முளைக்கட்ட என்ன செய்யணும்?
முதலில் நமக்கு தேவையான அளவு கோதுமைகளை அளந்து எடுத்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளல் அவசியம்.
பின்னர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதனை நன்றாக ஊற விடுங்கள். இதனை இரவு வேளைகளில் செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் தண்ணீரை வடிக்கட்டி அந்த கோதுமைகளை ஒரு காட்டன் துணியால் சுற்றி கட்டி ஒரு பக்கமாக வைத்து விடுங்கள்.
கட்டி நேரத்திலிருந்து சுமாராக எட்டு மணித்தியாலங்களுக்கு பின்னர் எடுத்து ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
இதனை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் எந்த விதமான விளைவுகளும் வராது. தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.
தோசை செய்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?
- தினமும் காலையில் இந்த தோசையை சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் தொங்கி கொண்டிருக்கும் எடை குறையும்.
- எலும்புகள் வலு பெறும். இதனால் முட்டு வலி, கால்வலி போன்ற வலிகள் வராது.
-
மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினையுள்ளவர்களுக்கு இது சூப்பர் மருந்து. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கவலையில்லாமல் சாப்பிடலாம்.