பெருங்குடல் புற்றுநோய் வந்தால் என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?
பெருங்குடல் புற்றுநோய் வந்தால் தடுப்பதற்கு பல மருந்துகள் இருந்தாலும் வெங்காயத்தாள் சமைத்து உணவாக சாப்பிடுவதால் இந்த நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
வெங்காயத்தாள்
வெங்காயம் என்னதான் எரிக்க உரிக்க தோலாக இருந்தாலும் அதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். வெங்காயத்தாளில் அதே சத்துக்கள் இருக்கின்றன.
இதில் வைட்டமின் C, B2, A, K, காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் போன்றவை காணப்படுகின்றன.
வெங்காயத்தாளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், DNA பாதிப்படையாமல் இருக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக கிடைக்கும்.
இது ரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் குறைக்கும் சக்தி கொண்டது. இதிலிருக்கும் வைட்டமின் K ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. ரத்தத்தில் காணப்படும் சக்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்ற கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
வைட்டமின் சி மற்றும் K இதில் காணப்படுவதால் இது எலும்பு வளர்ச்சிக்கும் உதவும். பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தினமும் மறக்காமல் இந்த வெங்காயத்தாளை சாப்பிட்டு வருதல் நன்மை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |