கெட்ட வார்த்தையால் பேசி மிரட்டும் பேய்! 233 ஆண்டுகளுக்கு நடந்த சம்பவம் என்ன?
இங்கிலாந்தில் இரண்டு பெண்களின் ஆவி மிரட்டுவதாக கூறி சோமர்செட் என்ற இடத்தில் வசிக்கும் மக்கள் கூறிவருகின்றனர்.
இவ்வுலகில் ஆவி, பேய் இவையெல்லாம் உண்மையா என்பது பலருக்கும் தெரியாத புதிராகவே இன்றும் இருந்து வருகின்றது.
இவ்வாறு இருக்கையில், இங்கிலாந்து நாட்டில் சோமர்செட் என்ற இடத்தில், Dead Woman's Ditch என்ற இடத்தில் விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இங்கு 1789-ஆம் ஆண்டு, ஜேன் வால்ஃபோர்ட் என்ற பெண்ணை தன் கணவனான ஜான் கேனன் என்பவர் கொலை செய்துவிட்டார் என்றும் பின்பு 1988ம் ஆண்டு அதே இடத்தில் ஷெர்லி என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இரு பெண்களின் மரணத்திற்கும் ஜான் கேனன் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இவ்வழியாக நடந்து செல்லும் நபர்களை திடீரென பெண் ஒருவரின் குரல் கெட்ட வார்த்தையால் திட்டி துரத்துவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
மேலும் பழங்கால வெண்ணிற ஆடையுடன் நீளமான கருப்பு நிற கோட் அணிந்த பெண்ணையும் அங்கு இருப்பவர்கள் அவதானிப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மக்களின் அச்சத்தினால், ஆவிகளை கண்டுபிடிக்கும் உள்ளூர் குழு ஒன்று உண்மையை தெரிந்து கொள்ள விசாரணையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.