கீரையில் Facial-ஆ? உங்களுக்கு தெரியுமா? ஏராளமான நன்மைகள்
ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் அத்தியாவசியமான உணவுப்பொருட்களில் ஒன்று பச்சைஇலைக்காய்கறிகள்.
கீரைகள் நம்முடைய வளர்சிதை மாற்றத்துக்கு மிக மிக இன்றியமையாதது. அதிலும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பசலைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது, இதில் வைட்டமின் ஏ, பி, தண்ணீரில் கரையக்கூடிய புரதச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
இதனை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும், உடல் எடையை குறைக்கும், நினைவாற்றலை பெருக்கும், கர்ப்பிணிகளுக்கு மிக மிக நல்லது, பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் இதனை கொண்டு Facial செய்யலாம் என உங்களுக்கு தெரியுமா?
ஆம் Spinach Facialலால் முகம் பொலிவு பெறும், இந்த பதிவில் அதை செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
ஒரு கைப்பிடி அளவு பசலைக்கீரையை எடுத்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும், இந்த கலவையுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேன் சேர்த்துக் கொள்ளவும்.
முகத்திற்கு தடவுவதற்கு முன்பாக நன்றாக கழுவிவிட்டு, Cleansing செய்து கொள்ளவும். பாதியளவு வெட்டப்பட்ட தக்காளியில் சர்க்கரையை கொட்டி முகத்தில் மசாஜ் செய்யவும்.
பின்னர் தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, பசலைக்கீரை கலவையை தடவவும், 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
அடுத்ததாக நீங்கள் பயன்படுத்தும் Serumயை போட்டுக்கொள்ளவும்.
அவ்வளவுதாங்க Spinace Facial
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |