சத்தான காலை உணவு அவல் தோசை.... வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
சத்தான காலை நேர உணவு அவல் தோசை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை உணவு என்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக நமது வேலைகளை செய்வதற்கான ஆற்றலை வழங்குவதற்கு முக்கிய காரணமே காலை உணவு தான்.
அந்த வாகையில் நாம் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும் இருக்க வேண்டும்.
புரதச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை தான் பலரும் தெரிவு செய்வார்கள். அவல் உணவுகளையும் காலையில் எடுத்துக் கொள்ளலாம். தற்போது அவல் தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்
அரிசி - 2 கிண்ணம்
உளுந்தம் பருப்பு - 1 கிண்ணம்
அரிசி - 2 கிண்ணம்
அவல் - கால் கிண்ணம்
சீரகம், உப்பு மற்றும் எண்ணெய் - சிறிதளவு
அவல் - கால் கிண்ணம்

செய்முறை
முதலில் அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் அவலை 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அனைத்தையும் தோசை ஊற்றும் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.

இதையடுத்து மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து தோசையாக ஊற்றவும்.
அவ்வுளவுதான் அவல் தோசை தயார். காரச்சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |