அட்டகாசமாக சுவையில் உருளைக்கிழங்கு வறுவல்... இப்படி ஒருமுறை செய்து பாருங்க
கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு இந்திய உணவுகளில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க கூடியதாக இருப்பது அதன் சிறப்பம்சமாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு சைவ உணவாக உருளைக்கிழங்கை குறிப்பிட முடியும்.
உருளைக்கிழங்கை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தடுக்கப்படுவதுடன் சரும ஆரோக்கியத்துக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட உருளைக்கிழங்கை கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான உருளைக்கிழங்கு வறுவல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
சோம்பு தூள் - 1 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
அரைப்பதற்கு தேவையானவை
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு - 6-8 பல்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் உருளைக்கிழங்ளை சுத்தம் செய்து தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை எடுத்து, அதில் உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் அதில் சோம்புத் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கைகளால் நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் பேனை அப்படியே அடுப்பில் வைத்து கிளறி, மூடி வைத்து உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு நன்றான வெந்ததும், மூடியைத் திறந்து 2 நிமிடம் நன்றாக வறுத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |