தோசை மாவு இல்லையா? மீந்து போன சாதம் இருந்தாலே போதும் மொறு மொறு தோசை செய்யலாம்
பொதுவாகவே பெரும்பாலாானவர்களின் காலை உணவு இட்லி, தோசை தான். தேசை மாவு இல்லாத சமயத்திலும் மொறு மொறுப்பான தோசை செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
மீந்து போன சாதத்தை வைத்து எப்படி சுவையான மொறு மொறு தோசை செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீந்து போன சாதம் - 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
அவல் - 1/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
புளித்த தயிர் - 2 மேசைக்கரண்டி
பச்சரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
சர்க்கரை - 3/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் மீந்து போன சாதம், துருவிய தேங்காய், அவல், 1/4 கப் தண்ணீர் மற்றும் புளித்த தயிர் ஆகியவற்வை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பச்சரிசி மாவு, 3/4 கப் தண்ணீர், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள தோசை மாவை ஊற்றி, மெலிதாக பரப்பிவிட வேண்டும்.
பின்னர் தோசையில் எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவை நிறைந்த மொறு மொறு தேசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |