ஹோட்டல் ஸ்டைல் மலபார் பெப்பர் சிக்கன் ப்ரை... எவ்வாறு தயாரிக்கலாம்?
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான மலபார் பெப்பர் சிக்கன் ப்ரை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - அரை கிலோமிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மசாலா அரைப்பதற்கு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - இரண்டரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
சோம்பு பொடி - கால் டீஸ்பூன்
மிளகு - ஒன்றரை டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். தண்ணீர் இல்லாமல் சிக்கனை எடுத்துக் கொண்டு அதில் மிளகுத் தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் கறிவேப்பிலை இவற்றினையும் சேர்த்து வதக்க வேண்டும்.

இதில் நுணுக்கிய மிளகு, மஞ்சள் தூள், சோம்பு பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் கிளறி விடவும்.
மசாலாவின் பச்சை வாசனை போன பின்பு சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் ஆகியவற்றினை கலந்து, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பின்பு ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். சிறிதளவு சிக்கன் வெந்த பின்பு அரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலையினை தூவி இறக்கினால் மலபார் பெப்பர் சிக்கன் ப்ரை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |