வீட்டில் சிக்கன் இருக்கா? அப்போ ஹைதராபாத் சிக்கன் கிரேவி செய்ங்க
அனைவரும் விரும்பி சாப்பிடகூடிய சிக்கனை வித்தியாசமான முறையில் ஹைதராபாத் ஸ்டைலில் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த கிரேவியை புலாவ், சப்பாத்தி, ரொட்டி, நாண்போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது சுவையை அதிகமாக்கி நல்ல ஒரு உணவு திருப்தியையும் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் - 1/2 கிலோ
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 1
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1
- கிராம்பு - 3
- நட்சத்திர சோம்பு - 1
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் சிக்கனை சுத்தம் செய்து கழுவி அதை ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் நட்சத்திர சோம்பு சேர்த்து கலந்து சிவந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிக்ஸ் செய்து வைத்திருக்கும் சிக்கனை அதில் போட்டு வதக்க வேண்டும். சிக்கன் துண்டுகள் எல்லாம் நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்துவரும் நிலையில் இதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதை 10 நிமிடங்கள் சமைத்து எடுக்கவும். இதை இறக்கி வைத்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான ஹைதராபாத் சிக்கன் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |