காரம் பிடித்தவர்களுக்கு சூப்பர் டிஷ் - காரசாரமான ஆந்திரா சிக்கன் கிரேவி
சிக்கன் கிரேவி எப்போதும் வைப்பது போல சுமாராக வைக்காமல் காரசாரமாக வைப்பது தான் எல்லோருக்கும் பிடிக்கும்.

பொதுவாக ஆந்திரா மக்கள் காரசாரமாக சாப்பிடுவதில் முதலிடத்தில் இருப்பார்கள். அந்த வகையில் வீட்டில் சிக்கன் இருந்தால் இந்த ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
- சிக்கன், பெரிய வெங்காயம்,
- பச்சை மிளகாய்,
- கருவேப்பிலை,
- கொத்தமல்லி,
- மிளகு,
- மல்லி,
- சீரகம்,
- சோம்பு,
- காய்ந்த மிளகாய்,
- அன்னாச்சி பூ, பட்டை,
- எண்ணெய்,
- இஞ்சி பூண்டு பேஸ்ட்,
- மிளகாய் தூள்,
- மஞ்சள் தூள்,
- உப்பு.

செய்முறை
கிரேவி செய்ய முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு, காய்ந்த மிளகாயை, அன்னாச்சி பூ, பட்டை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
பின்னர் அதை ஆநவைத்து அரைத்து எடுக்க வேண்டும்.
பின்ன்னர் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மூன்று பெரிய வெங்காயத்தினை எடுத்து பொடியாக நறுக்கி சேர்த்து விட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பின்னர் சிக்கன் சேர்த்து சிக்கன் மேல் தேவையான அளவு மிளகாய் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு சிக்கன் முழுவதும் மசாலா படும்படி மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பின் மிதமான சூட்டில் வைத்து ஒரு 10 நிமிடம் வரை சிக்கன் வேக வைக்கவும்.
சிக்கன் வெந்தஉடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு பெரட்டி விட்டு சிக்கனை நன்றாக வெந்ததும் பச்சை மிளகாயை நறுக்கி அத்துடன் கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து விட்டு பெரட்டி எடுத்தால் ஆந்திரா ஃபேமஸ் சிக்கன் கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |