Sunday special: கிராமத்து பாணியில் உப்பு மிளகு கறி... எப்படி செய்வது?
நம்மில் பெரும்பாலானவர்கள் இந்த உப்பு மிளகு மட்டன் குழம்பை சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.
இந்த உப்பு மிளகு மட்டன் குழம்பு சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்திற்கும் சூப்பராக பொருந்தும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் கிராமத்து பாணியில் உப்பு மிளகு மட்டன் கறி எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 1 கிலோ மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
வரமிளகாய் - 5 (விதைகளை நீக்கிக் கொள்ளவும்)
காஷ்மீரி மிளகாய் - 2 (விதைகளை நீக்கிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
சுடுதண்ணீர் - 2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு தடிமனான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து விதைகளை நீக்கிய வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆதியவற்றை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனையும் அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
மட்டனில் இருந்து நீர் வந்ததும், அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிட்டு ,நல்ல சூடான நீரை 2 கப் ஊற்றி கிளறி, 10 நிமிடம் வரையில் நன்கு வேகவிட வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வரையில் வேகவிட்டு, முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறிக்கொடுக்க வேண்டும்.
மட்டன் நன்றாக வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு பிரட்டிவிடடு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் உப்பு மிளகு மட்டன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |