சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? இந்த பச்ச சட்னி இருந்தா போதும்
இப்போதெல்லாம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, நமது உடல் உட்பாகங்கள் பழுதடைந்து வருகின்றது. உடலில் அதிகமாக உழைக்கும் உள் உறுப்புக்களில் சிறுநீரகமும் ஒன்று.
இந்த சிறுநீரகத்தை கவனமாக பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். இதை செயல் இழக்கச்செய்யும் போது உடலில் பல நோய்கள் உண்டாகும். இதில் முக்கியமாக யூரிக் அமிலம், சிறுநீரக கற்கள் மற்றும் பிற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
இந்த பிரச்சனைகளை அப்படியே விரட்டியடிப்பதற்கு நாம் வீட்டிலேயே ஒரு உணவை செய்து சாப்பிட முடியும். இதற்கு பச்சை சட்னி உதவுகிறது இதில் என்னென்ன சேர்க்கப்படுகின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பச்சை சட்னி செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் கொத்தமல்லி இலைகள்
- அரை கப் புதினா இலைகள்
- 2-3 பூண்டு பல்
- 1 அங்குல துண்டு இஞ்சி
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- அரை டீஸ்பூன் சீரகப் பொடி
- சுவைக்கேற்ப கருப்பு உப்பு
- 1 பச்சை மிளகாய்
செய்யும் முறை
முதலில், உப்பு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் கழுவி மிக்ஸியில் அரைக்கவும். பேஸ்ட் தயாரானதும், அதில் உப்பு கலந்து, சட்னியை காற்று புகாத டப்பாவில் சேமித்து, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
சட்னியின் நன்மைகள்
இந்த சட்னியில் உள்ள டையூரிடிக் பண்புகள் சிறுநீர் வழியாக யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகின்றன. எலுமிச்சை மற்றும் இஞ்சி சிறுநீரகங்களை நச்சு நீக்குவதில் உதவியாக இருக்கும்.
பூண்டு மற்றும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கின்றன.
இந்த சட்னியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் செரிமான அமைப்பை பலப்படுத்துகின்றன. இந்த சட்னியை நீங்கள் தினமும் 1 முதல் 2 ஸ்பூன் வரை சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![தினமும் பெண்கள் ஏன் உடற்பயிற்சி அவசியம்- மருத்துவர் விளக்கம்](https://cdn.ibcstack.com/article/52eeefb4-d168-4abd-9b72-19b59d5bf90a/25-67aa90e6bbf8b-md.webp)