பானை மாதிரி வீங்கி இருக்கும் வயிற்றை குறைக்கும் மசாலா பொருட்கள்.. வீட்டு வைத்தியம்
பொதுவாக உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு சமையலறை மசாலா பொருட்களுக்கு இருக்கின்றது.
சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்புதல், இறுக்கம் அல்லது வீக்கம் போன்ற உணர்வை “வயிறு வீக்கம்” என்று அழைக்கப்படுகிறது.
இது போன்ற வீக்கம் ஏற்பட்டால் செரிமானக் கோளாறு, வயிறு பெரிதாகுதல், வேலைகள் செய்வதில் சிரமம் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை உண்டு பண்ணும். இந்த வீக்கம் நிரந்தரமாக இல்லாவிட்டாலும் இதனால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும்.
வயிறு வீக்கம் பிரச்சினை இருப்பவர்கள் மருந்து வில்லைகளை எடுப்பதற்கு முன்னர் வீட்டிலுள்ள மசாலா பொருட்களை கொண்டு வைத்தியம் செய்து பார்க்கலாம்.
அந்த வகையில் வயிறு வீக்கம் பிரச்சினைக்கு வீட்டிலுள்ள மசாலா பொருட்களை எப்படி பயன்படுத்துவது? என்னென்ன பொருட்களை பயன்படுத்துவது? என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.
வயிறு வீக்கம்
1. சாப்பிடும் உணவுகளில் அடிக்கடி இஞ்சி சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனின் இஞ்சியில் இருக்கும் பயோஆக்டிவ் கலவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது வயிறு வீக்கத்தை குறைக்க உதவியாக இருக்கும்.
2. புதினா இலைகளை உணவில் சேர்ந்து கொள்ளும் போது அதிலிருக்கும் மெந்தோல் இரைப்பைக் குழாயின் தசைகளில் ஓய்வெடுக்க செய்யும். உணவில் சேர்த்து கொள்வதை விட தேநீர் போன்ற திரவ உணவுகளில் சேர்த்து கொள்வது சிறந்தது.
3. பாரம்பரியங்களின் ஒன்றான பெருஞ்சீரகம் விதைகளை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள செரிமானப் பாதை தசைகள் தளர்த்தி வீக்கத்தைக் குறைக்கும்.
4. செரிமான நொதியங்களை உற்பத்தி செய்வதில் சீரகம் முக்கிய பங்காற்றுகின்றது. உணவு முறிவுக்கு உதவுகிறது மற்றும் செரிமான மண்டலத்தில் வாயு குவிவதைத் தடுக்கிறது.
5. சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ள பொருட்களில் மஞ்சள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. மஞ்சள் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுத்தப்படுகின்றது. இதனால் வயிற்றில் ஏற்படும் வீககம் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |