அவர் வந்தா மட்டுமே பேசுவேன்... போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் மீரா மிதுன்
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதால் நேற்று கேரளாவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகமாக செயல்படுவதாக வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக தற்பொழுது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்.
சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுனிடம் காவல்துறையினர் தற்பொழுது விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அவர் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசியது தொடர்பான வீடியோக்களை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விசாரணையில் வாக்குமூலம் தர மீரா மிதுன் அடம்பிடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் எனவும் அடம்பிடித்து வருகிறாராம்.
அதன்பின்னர், 24 மணி நேரமும் எனக்கு சாப்பாடு தரவில்லை எனவும் போலீசார் அராஜகம் பண்ணுகிறார்கள் என சர்ச்சையாக மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.