செவ்வாய் பெயர்ச்சி: செப்டம்பர் 18 முதல் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், ரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் உள்ளிட்டவற்றின் காரணியாக செவ்வாய் விளங்குகிறார். மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும்போது, செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை தங்கியிருப்பார்.

தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 18-ம் தேதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் செவ்வாய் நுழையவுள்ளார். இந்தப் பயணத்தின்போது செவ்வாய் கடக ராசியில் நவம்பர் 12-ம் தேதி வரை இருப்பார்.
ஜோதிடத்தில், கடக ராசியில் செவ்வாய் நீச்சமடைவதாகக் கருதப்படுகிறது. அதேபோல், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் ஆற்றல்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, சில ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் பல்வேறு பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடலாம். எனவே, செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வார்த்தைகளிலும் புதிய முடிவுகளை எடுப்பதிலும் நிதானம் தேவை.
பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன், வேலைகளை முடிப்பதில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
மன அழுத்தம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. பண விஷயங்களிலும் வழக்கத்தைவிட கூடுதல் கவனம் தேவை.
துலாம்

துலாம் ராசியின் 10-வது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், குறிப்பாக பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படக்கூடும்.
வேலையை முடிப்பதில் தடைகள் வரலாம். கூட்டு தொழிலைத் தவிர்ப்பது நல்லது. எந்த ரிஸ்க் எடுத்தாலும் நன்கு யோசித்த பிறகே முடிவு செய்ய வேண்டும்.
அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். திருமணமான தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பணத்தை கையாளும் போதும் புதிய முதலீடுகளின் போதும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மகரம்

மகர ராசியின் 7-வது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் சவாலானதாக இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் தற்காலிக பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
தன்னம்பிக்கை குறையக்கூடும். கோபத்தைத் தவிர்த்து, பேசும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். யாருடனும் மோதலில் ஈடுபட வேண்டாம்.
இல்லையெனில் அது பெரிய பிரச்சனையாகி நீதிமன்றம் வரை செல்லக்கூடும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கும் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் கவனம் தேவை.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |